Categories
சினிமா தமிழ் சினிமா

“எனக்கு 20 வயது தான் இருந்தது” பம்பாய் பட அனுபவம்…. மனம் திறந்த மனிஷா கொய்ராலா….!!!!

பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் மனிஷா கொய்ராலா. இவர் தமிழில் இந்தியன், முதல்வன் மற்றும் பம்பாய் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். கடந்த 2010-ம் ஆண்டு மனிஷா கொய்ராலா சாம்ராட் தேகல் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் 2 வருடங்களில் மனிஷா கொய்ராலா தன்னுடைய கணவரை விவாகரத்து செய்தார். அதன் பிறகு புற்று நோயால் பாதிக்கப்பட்டு வெளிநாட்டில் சிகிச்சை பெற்று வந்ததிலிருந்து மனிஷா கொய்ராலா படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டார்.

இந்நிலையில் மனிஷா கொய்ராலா பம்பாய் படத்தில் நடித்த அனுபவம் பற்றி சமீபத்தில் கூறியுள்ளார். அவர் பம்பாய் படத்தில் நடிக்கும் போது எனக்கு 20 வயது இருந்தது. இதன் காரணமாக பலர் 20 வயதில் அம்மா கதாபாத்திரத்தை ஏற்று நடித்தால், இன்னும் 10 வருடங்களில் பாட்டி கதாபாத்திரம் தான் வரும் என்றார்கள். ஆனால் சிலர் மணிரத்தினம் படத்தில் நடிப்பதை மறுப்பது முட்டாள்தனம் என்றார்கள். மேலும் பம்பாய் படத்தில் நான் நடித்தது எனக்கு மிகப்பெரிய பெயரை பெற்று கொடுத்தது என்றும் கூறினார்.

Categories

Tech |