பிரபல நடிகர் விஜய்க்கு வருமான வரித்துறை விதித்த அபாரதத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்து இருக்கிறது. வருமானவரித்துறை ரூபாய்.1.5 கோடி அபராதம் விதித்த உத்தரவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக் கால தடை விதித்துள்ளது. மேலும் செப்டம்பர் 16 ஆம் தேதிக்குள் பதில் அளிக்க வருமான வரித்துறைக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
2016 -2017 நிதியாண்டில் ரூபாய் 15 கோடி வருமானத்தை மறைத்ததாக ரூ.1.5 கோடி அபராதம் விதித்து வருமான வரித்துறை 2022 ஜூன் 30ல் உத்தரவிட்டது. சட்டப்படி உரிய காலத்தில் பிறப்பிக்கப்படாததால் அபராத உத்தரவை ரத்து செய்ய விஜய் கோரிக்கை வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.