தங்க சுரங்கங்களை விற்பனை செய்வதில் மத்திய அரசு தீவிரம் காட்டியுள்ளது.
உத்திரபிரதேசம் மற்றும் ஆந்திர பிரதேச மாநிலங்களில் தங்க சுரங்கங்கள் உள்ளது. இந்த சுரங்கங்களை விற்பனை செய்வதில் மத்திய அரசு தீவிரம் காட்டியுள்ளது. இதுவரை 10 சுரங்கங்கள் ஏலத்தில் விடப்பட்டு விற்பனை செய்யப்பட்ட நிலையில், வருகிற 26-ம் தேதி 5 சுரங்கங்கள் ஏலத்தில் விடப்படுகிறது.
இதைத்தொடர்ந்து ஆகஸ்ட் 29-ம் தேதி 5 சுரங்கங்கள் எஏலத்தில் விடப்படும். மேலும் மீதமுள்ள 3 சுரங்கங்கள் விற்பனை செய்யப்படுவதற்கான அறிவிப்புகள் எதுவும் வெளியாகாத நிலையில், நடப்பாண்டில் மட்டும் 45 தங்க சுரங்கங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.