Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

சுதந்திர தினம் எதிரொலி!… ஆழியாறில் அலைமோதிய சுற்றுலா பயணிகள்…..!!!!

நாடு விடுதலை அடைந்து 75 வருடங்கள் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் நாடு முழுதும் ஓராண்டுக்கு சுதந்திரதின கொண்டாட்டத்தில் ஈடுபடுவது என மத்திய அரசு முடிவு செய்தது. அந்த வகையில் கடந்த வருடம் சுதந்திரதினம் முதல் அது நடைமுறைக்கு வந்தது. ஓராண்டாக சுதந்திரதின திருநாள் அமுதப் பெருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் 76வது சுதந்திரதின விழா நேற்று நாடு முழுதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு தொடர் விடுமுறை விடப்பட்டதால் சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் களை கட்டியது. அந்த அடிப்படையில் கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகேயுள்ள ஆழியாறில் பெரும்பாலான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் அணை பகுதியை சுற்றி பார்த்து மகிழ்ந்தனர்.

Categories

Tech |