Categories
உலகசெய்திகள்

“மடகாஸ்கருக்கு 15,000 சைக்கிளை வழங்கிய இந்தியா”… இலவச சைக்கிளில் சவாரி செய்த பிரதமர்… வைரலாகும் வீடியோ..!!!!!

இந்திய தேசத்தின் 76 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்தியாவின் தோழமை நாடான மடகாஸ்கருக்கு 15,000 சைக்கிள்களை இந்தியா வழங்கியிருக்கிறது. மடகாஸ்கர் மற்றும் கொமொரோஸ் நாட்டின் இந்திய தூதர் அபய்  குமார் மற்றும் மடகாஸ்கர் பிரதமர் கிறிஸ்டியன் என்ட்சே போன்றோர் ஒன்றாக இந்த சைக்கிள்களை ஒட்டியுள்ளனர். இந்த நிலையில் இரு நாடுகளுக்கும் இடையே வளர்ந்து வரும் நட்பு மற்றும் ஒற்றுமையை வெளிப்படுத்தும் விதமாக அவர்கள் ஒன்றாக சைக்கிளை ஓட்டியுள்ளனர்.

அண்டனானரிவோவில் செயல்பட்டு வரும் மடகாஸ்கர் மற்றும் கொமோரோஸ் நாட்டு களுக்கான இந்திய தூதரகம் இந்த வீடியோவை ட்விட்டரில் பதிவிட்டுள்ளது. மேலும் சுதந்திர தினத்தை முன்னிட்டு மடகாஸ்கர் தலைநகர் அண்டனானரிவோவில் உள்ள இந்திய தூதரக கட்டிடம் இந்திய மூவர்ண விளக்குகளில் காணப்பட்டுள்ளது. அங்கு இந்திய தூதர் அபய் குமார் தேசிய கொடியை ஏற்றியுள்ளார். மேலும் இந்த நிகழ்ச்சியில் ஏராளமானோர்  பங்கேற்று சிறப்பித்துள்ளனர்.

Categories

Tech |