Categories
தேசிய செய்திகள்

ரயில் பயணிகளுக்கு முக்கிய கட்டுப்பாடுகள்… தெற்கு ரயில்வே வெளியிட்ட தகவல்…!!!!!!

இந்தியாவில் இரண்டு வருடங்களுக்குப் பிறகு தற்போது ரயில்கள் வழக்கம் போல் இயங்கப்பட்டு வருகின்றது. அதனை தொடர்ந்து ரயில் பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு முன் பதிவு இல்லா ரயில்களும் இயக்கப்பட்டு வருகின்றது. இந்த நேரத்தில் ஐ ஆர் சி டி சி பயணிகளுக்கு பல்வேறு புதிய திட்டங்களை அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் ஐ ஆர் சி டி சி இணையதளம் வாயிலாக டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி பயணிகளுக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

இதன் மூலமாக பயணிகள் வீட்டில் இருந்தபடியே டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம் மேலும் உங்களின் போட்டிங் பாயின்டையும்  மாற்றிக் கொள்ளும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து பயணிகள் தங்களின் குறைகளை கூறுவதற்கு ஹெல்ப்லைன் ஏன் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. இதன் மூலமாக பயணிகள் ரயில் நிலையம் தொடர்பான புகார்களை தெரிவித்துக் கொள்ளலாம். அது மட்டுமல்லாமல் தற்போது உணவுகளை வாங்கும் போது qr கோடு மூலம் பணம் செலுத்தும் வசதியை ஐஆர் சிடிசி அறிமுகப்படுத்தி இருக்கிறது.

இந்த சூழலில் ஆகஸ்ட் 13 முதல் 15 ஆம் தேதி வரை மூன்று நாட்கள் தொடர் விடுமுறை முன்னிட்டு கூடுதல் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றது. இன்று சுதந்திர தின விழாவை முன்னிட்டு நாடு முழுவதும் இயங்கும் ரயில்களில் புது டெல்லிக்கு பார்சல் அனுப்பு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. மேலும் வழக்கமாக சேலம் ரயில் நிலையத்திலிருந்து நூல், பனியன், பட்டு, வேஷ்டி, சேலை, இருசக்கர வாகனம், கொசுவலை போன்றவை புதுடெல்லிக்கு பார்சல் அனுப்பப்பட்டு வருகிறது. இவற்றை அனுப்ப நாளை வரை தடை விதிக்கப்பட்டிருக்கிறது. மற்ற பகுதிகளுக்கு அனுப்பப்பட்டு வரும் பார்சலும் பலத்த பரிசோதனைக்கு பிறகு ரயில்களில் ஏற்றப்படுகின்றது.

Categories

Tech |