தமிழகத்தில் அரசு பணியில் பணியாற்றி வரும் ஊழியர்கள் தங்களுடைய பணிக்காலத்தில் தங்களுக்கு தேவையான பலன்களை கோரிக்கையாக அரசிடம் வைத்து வருவார்கள். அவர்களுடைய கோரிக்கையில் நியாயம் இருந்தால் அரசு உடனடியாக ஊழியர்களுடைய கோரிக்கை நிறைவேற்றும். அவ்வாறு ஊழியர்களின் கோரிக்கையில் நியாயம் இல்லாத பட்சத்திலும் ஊழியர்களுடைய கோரிக்கை அரசு நிராகரிக்கும் போது அல்லது தாமதிக்கும் போது ஊழியர்கள் போராட்டம் செய்வார்கள். இது போன்ற பல வருடங்களாக அரசு பணியில் இருக்கும் ஆசிரியர்கள் பணி காலத்தில் கூடுதல் கல்வி தகுதியைப் பெற்றால் அவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் 10.3.2020 முன்பாக பணியில் சேர்ந்து ஆசிரியர்களுக்கு உயர் கல்விக்கான ஊக்கு ஊதியம் வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதேபோன்று கூடுதல் கல்வி பெற அரசால் அனுப்பப்பட்டிருந்தாலும் அல்லது கல்வி விடுப்பை பயன்படுத்தி கூடுதல் கல்வி பெற்றிருந்தாலும் அவர்களுக்கு ஊக்கத்தொகை இல்லை. அரசு ஊழியர் அல்லது ஆசிரியர்கள் பணியில் சேர்ந்த நாளிலிருந்து ஓய்வுறும் நாள் வரை இரண்டு முறை மட்டுமே கூடுதல் கல்விக்கான ஊக்கத்தொகை பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.