Categories
சென்னை மாநில செய்திகள்

சுதந்திர தின கொண்டாட்டத்தால் விபரீதம்… அரசு பேருந்து மோதி…. 12 ஆம் வகுப்பு மாணவி பரிதாபமாக பலி….!!!!!

சென்னை குரோம்பேட்டையில் அரசு பேருந்து மோதி 12-ம் வகுப்பு மாணவி லட்சுமி ஸ்ரீ சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சென்னையை அடுத்து அமைந்துள்ள குரோம்பேட்டை அருகே ஹஸ்தினாபுரம் பகுதியில் தனியார் பள்ளி ஒன்று உள்ளது.

சுதந்திர தினவிழா கொண்டாட்டத்திற்காக மாணவ, மாணவிகள் வழக்கம்போல பள்ளிக்கு வந்து தேசிய கொடி ஏற்றும் நிகழ்வில் பங்கேற்றுவிட்டு வீட்டுக்கு சென்றனர். இந்த நிகழ்வில் பங்கேற்ற 12-ஆம் வகுப்பு மாணவி ஒருவரும் தன்னுடைய வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக முன்னே வந்த அரசு பேருந்து மோதி  மாணவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |