நமது நாடு சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் நிறைவு பெறுகின்றது. இதனை கொண்டாடும் விதமாக சுதந்திர தின அமிர்த பெருவிழா என்னும் பெயரில் ஒன்றிய அரசு பல்வேறு செயல்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது. இதன் ஒரு அங்கமாக இல்லம்தோறும் தேசியக்கொடி என்னும் திட்டத்தை ஒன்றிய அரசு அறிவித்திருக்கிறது. அதன்படி வருகிற 13-ஆம் தேதி முதல் சுதந்திர தினமான 15ஆம் தேதி வரையிலான மூன்று நாட்கள் தங்கள் வீடுகளில் பொதுமக்கள் நமது தேசியக்கொடி பட்டொளி வீசி பறக்க செய்யுமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.
மேலும் கடந்து இரண்டாம் தேதி முதல் 15ஆம் தேதி வரை அனைத்து இந்தியர்களும் தங்களுடைய சமூக ஊடக கணக்குகளில் முகப்பு படமாக தேசிய கொடியை வைக்க வேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். இதனை அடுத்து பாஜகவினர் பலரும் தங்களது சமூக ஊடக பக்கங்களில் தேசிய கொடியை முகப்பு படமாக பதிவேற்றம் செய்து வருகின்றார்கள். இந்த நிலையில் ரஜினி தனது ட்விட்டர் முகப்பு பக்கத்தில் மாறியுள்ள அதே தேசியக்கொடி புகைப்படத்தை தனது சமூக வலைதள பக்கத்திலும் மாற்றி இருக்கிறார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். இதனை தொடர்ந்து ரசிகர்கள் அனைவரும் அவரை பாராட்டி வருகின்றார்கள். முன்னதாக ரஜினி பிரதமரின் மற்றொரு கோரிக்கையை ஏற்று தனது வீட்டின் முன் தேசிய கொடியேற்றது குறிப்பிடத்தக்கதாகும்.