தமிழ் சினிமாவில் முன்னனி நடிகராக வலம் வருபவர் சிம்பு. சிறுவயதிலே தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி அனைவரின் பாராட்டுகளையும் பெற்றுள்ளார். அதனை தொடர்ந்து காதல் அழிவதில்லை எனும் படத்தின் மூலமாக ஹீரோவாக அறிமுகம் ஆனார். சில காலமாக சிம்புவின் படங்கள் வெளியானாலும் எதிர்பார்க்க வெற்றியை பெறாமலே இருந்தது. இதனை தொடர்ந்து உடல் எடை கூடி சிம்பு கடுமையான விமர்சனங்களுக்கு ஆளாளர். என்னதான் அவர் படங்கள் தோல்வியை சந்தித்தாலும் அவரது ரசிகர்கள் அவருக்கு பக்கபலமாக இருந்தனர்.
அதனால் தன் ரசிகர்களுக்காக மீண்டும் தனது உடல் எடையை குறைத்து விறுவிறுப்பாக படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார். சுசீந்திரன் இயக்கத்தில் அவர் நடித்த ஈஸ்வரன் திரைப்படத்தில் உடல் எடையை குறைத்து பழைய சிம்புவாக காட்சி அளித்துள்ளார். இதனை ரசிகர்கள் கொண்டாடினர். மாநாடு படத்தின் வெற்றியை தொடர்ந்து சிம்பு செம பிஸியான நடிகராக மாறிவிட்டார். இந்த நிலையில் கௌதம் என இயக்கத்தில் வெந்து தந்தது காடு கிருஷ்ண இயக்கத்தில் பத்து தலை போன்ற படங்களில் நடித்து வருகின்றார். இதில் கௌதம் மேனன் தயாரிப்பில் உருவான வெந்து தணிந்தது காடு திரைப்படம் செப்டம்பர் மாதம் வெளியாக இருக்கின்றது.
இந்த நிலையில் தற்போது தமிழ் சினிமாவில் பரபரப்பு நடிகராக வலம் வரும் சிம்பு மதுபான விளம்பரத்தில் நடிக்க மறுப்பு தெரிவிப்பது பலரது பாராட்டுகளையும் பெற்றுள்ளது. இந்த தகவல் தற்போது இணையதளத்தில் செம வைரலாக வருகின்றது. அதாவது ஒரு வெளிநாட்டு மதுபான நிறுவனம் தங்கள் விளம்பரத்தில் நடிக்க சிம்புவை மிகப் பெரிய தொகைக்கு கேட்டிருக்கிறது. ஆனால் ரசிகர்களின் நலனை கருத்தில் கொண்டு சிம்பு அந்த விளம்பரத்தில் நடிக்க மறுத்து விட்டாராம். சிம்புவின் இந்த செயலை கண்டு அவரது ரசிகர்கள் வெகுவாக பாராட்டி வருவது குறிப்பிடத்தக்கதாகும்.