Categories
சினிமா தமிழ் சினிமா

“இப்படி எல்லாம் நடந்து கொள்வது வருத்தமாக உள்ளது”… கிரிக்கெட் வீரர் பதிலடி…!!!!!

இந்தி, பெங்காலி மற்றும் கன்னட மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்து பிரபலமாகியுள்ளார் ஊர்வசி ரவுடேலா. இவர் தமிழில் அருள் சரவணன் ஜோடியாக தி ஜெலண்ட் படத்தில் நடித்து அறிமுகம் ஆகியுள்ளார். இந்த நிலையில் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்று அவர் தனது வாழ்க்கையில் நடைபெற்ற முக்கியமான நிகழ்வுகளை பகிர்ந்துள்ளார். அப்போது நிறைய பேர் தன்னிடம் காதல் வலையை  வீசியிருப்பதாக தெரிவித்த அவர் இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரிஷாப் பண்ட் பற்றியும் சில கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

அதில் தன்னை சந்தித்து பேசுவதற்காக நீண்ட நேரம் ஓட்டலில் ரிஷாப் பண்ட் காத்திருந்தார் என அவர் குறிப்பிட்டுள்ளார். ஊர்வசியின் இந்த கருத்திற்கு ரிஷாப் பண்ட் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிலடி கொடுத்திருக்கிறார். அதில் பிரபலமாக வேண்டும் நாம் கவனிக்கப்பட வேண்டும் என்பதற்காக இவ்வாறு நேர்காணலில் பேசுவது வேடிக்கையாக உள்ளது. பெயருக்காகவும் பிரபலமாவதற்காகவும் இப்படி எல்லாம் நடந்து கொள்வது வருத்தமாக இருக்கிறது. இவர்களை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் என அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.

Categories

Tech |