Categories
சினிமா

திரைப்பட சண்டை பயிற்சி கலைஞர் கனல் கண்ணன் கைது…. போலீஸ் நடவடிக்கை….!!!!!

கடந்த 1991 ஆம் வருடம் இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் வெளியாகிய சேரன் பாண்டியன் திரைப்படத்தின் வாயிலாக திரையுலகிற்கு சண்டை பயிற்சியாளராக அறிமுகமானவர் கனல் கண்ணன். இதையடுத்து நாட்டாமை, தேவா, முத்து, பூவே உனக்காக, அவ்வை சண்முகி ஆகிய பல்வேறு திரைப்படங்களுக்கு இவர் சண்டை பயிற்சியாளராக பணிபுரிந்துள்ளார். இவர் பணிபுரியும் படங்களில் அவ்வப்போது சண்டை காட்சிகளில் சிறுசிறு வேடங்களில் தோன்றி அனைவராலும் அறியப்பட்டார். இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார் இயக்கும் பெரும்பாலான படங்களுக்கு கனல் கண்ணன் பணியாற்றி பலரின் பாராட்டுக்களையும் பெற்றார்.

சில நாட்களுக்கு முன் ஒரு நிகழ்ச்சியில் கனல் கண்ணன், பெரியார் பற்றி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. அவற்றில், உலகப் புகழ்பெற்ற திருச்சி ஸ்ரீரங்கம் கோவில் முன் இருக்கும் கடவுள் இல்லை என கூறியவரின் சிலை என்றைக்கு உடைக்கப்படுகிறதோ அன்று தான் ஹிந்துக்களின் உண்மையான எழுச்சி நாள் என்று கனல் கண்ணன் பேசியிருந்தார். இவரது இந்த கருத்துக்கு பல பேர் எதிர்ப்புகளும், ஆதரவுகளும் தெரிவித்து வந்தனர்.

அதன்பின் கனல் கண்ணனுக்கு எதிராக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், தந்தை பெரியார் திராவிடக் கழகத்தின் மாவட்ட செயலாளர் குமரன் புகார் அளித்தார். அதன்படி பொதுஅமைதியை சீர்குலைத்தல் சட்டப் பிரிவுகளின் கீழ் கனல் கண்ணன் மீது சைபர் கிரைம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். அதனை தொடர்ந்து முன் ஜாமீன் கேட்டு கனல்கண்ணன், மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்து இருந்தார். இந்த நிலையில் பெரியார் சிலை தொடர்பாக அவதூறு கருத்து தெரிவித்த புகாரில் சண்டை பயிற்சி கலைஞர் கனல் கண்ணனை பாண்டிச்சேரியில் வைத்து சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்திருக்கின்றனர்.

Categories

Tech |