Categories
உலகசெய்திகள்

சல்மான் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம்… “நாங்கள் நிம்மதி அடைந்துள்ளோம்”.. மகன் ஜாபர் ருஷ்டி டுவீட்…!!!!

பிரபல எழுத்தாளரான சல்மான் ருஷ்டி மீது நேற்று முன்தினம் கத்தி குத்து தாக்குதல் சம்பவம் நடத்தப்பட்டுள்ளது. அமெரிக்காவின் நியூயார்க்  நகரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற சல்மான் ருஷ்டி விரிவுரை ஆற்ற இருந்த நேரத்தில் மேடையில் திடீரென ஏறிய நபர் சல்மானை கத்தியால் குத்தியுள்ளார். இதில் சல்மானின் கழுத்தில் படுகாயம் ஏற்பட்டுள்ளது. கத்திக்குத்து தாக்குதலில் படுகாயம் அடைந்த சல்மான் ஆபத்தான சூழலில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.

முதலில் அவருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது. இந்த சூழலில் அவரது உடலில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு இருப்பதாக அவரது மகன் ஜாபர் கூறியுள்ளார். தந்தையின் உடல்நலம் பற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். நேற்று அவருக்கு 20 லிட்டர் மற்றும் கூடுதல் ஆக்சிஜன் கழற்றப்பட்டுள்ளது. அவரால் சில வார்த்தைகள் பேச முடிகின்றது அதனால் நாங்கள் மிகவும் நிம்மதி அடைந்திருக்கின்றோம். உலகம் முழுவதிலும் இருந்த அன்பையும் ஆதரவையும் வெளிப்படுத்த அனைவருக்கும் நன்றி என கூறியுள்ளார்.

Categories

Tech |