சென்னை பெடரல் வங்கி கிளை கொள்ளையில் முக்கிய குற்றவாளியான முருகன் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை அரும்பாகத்தில் இருக்கக்கூடிய பெடரல் வங்கியின் நகை கடன் பிரிவில் நேற்று முன்தினம் பட்டப் பகலில் சரியாக 3.30 மணிக்கு மேலாக காவலாளிக்கு குளிர்பானத்தில் மயக்கம் மருந்து கொடுத்தும், அங்கு இருக்கக்கூடிய ஊழியர்களை கட்டி போட்டுவிட்டு கிட்டத்தட்ட 15 கோடி மதிப்பிலான தங்க நகைகளை (32 கிலோ தங்கம்) ஒரு கும்பல் திருடிச்சென்றது.. இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் அங்கு பணியாற்றிய ஊழியர் முருகன் கூட்டாளிகளுடன் சேர்ந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது..
பின்னர் காவலர்கள் 6 தனிப்படை அமைத்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டது.. மேலும் துப்பு கொடுத்தால் ஒரு லட்சம் பரிசு எனவும் காவல்துறை தரப்பில்தெரிவிக்கப்பட்டது. குறிப்பாக சுற்றுவட்டாரத்தில் இருக்கக்கூடிய சிசிடிவி காட்சிகளை வைத்தும், செல்போன்களை வைத்தும் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் நேற்று பாலாஜி, சக்திவேல், சந்தோஷ் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் முக்கிய குற்றவாளி முருகன் திருமங்கலம் காவல்நிலையத்தில் சரணடைந்தார். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.. கொள்ளையடிக்கப்பட்ட 32 கிலோ தங்கத்தில் 18 கிலோ நகைகள் வரை மீட்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் இதற்கு உடந்தையாக யார் யாரெல்லாம் இருக்கிறார்கள் என்று அடுத்த விசாரணையில் தெரியவரும், தற்போது முக்கிய குற்றவாளி முருகனிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.