Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பெண் பயணியிடம் நகை பறிப்பு…. அதிகாரிகள் போல் நாடகமாடிய 2 பேர்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!!!

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமானம் நிலையத்திற்கு இலங்கையைச் சேர்ந்த நதிஷா ரோஷினி (47), வசீகா (45) போன்றோர் சென்ற 8-ஆம் தேதி அதிகாலை கொழும்பிலிருந்து பயணிகள் விமானத்தில் வந்தனர். இவர்கள் சுங்க இலாகா மற்றும் குடிஉரிமை சோதனையை முடித்து விட்டு வெளியே வந்தனர். இதையடுத்து சென்னை மண்ணடி செல்வதற்காக விமான நிலையத்திலுள்ள மெட்ரோ ரயில் நிலையத்துக்கு நடந்து சென்றனர். அப்போது கார் பார்க்கிங் அருகே நடந்து வந்தபோது அவர்களை 2 பேர் வழிமறித்து, “நாங்கள் சுங்கத்துறை அதிகாரிகள் எனகூறி தங்கள் அடையாள அட்டையை காட்டினர். மேலும் நீங்கள் இருவரும் அதிக நகைகளை அணிந்து உள்ளீா்கள். இந்த நகைகளுக்கு சுங்க வரி கட்டாமல் வெளியில் எடுத்து வந்துவிட்டீர்கள்.

மீண்டும் சுங்க அலுவலகத்துக்கு வந்து வரியை கட்டவேண்டும்” என்று கூறினர். அதுமட்டுமின்றி நதிஷா, ரோஷினி அணிந்திருந்த 59 கிராம் தங்க வளையல்களை கழற்றி வாங்கிய அவர்கள், சுங்க வரியை கட்டிவிட்டு அதனை வாங்கி கொள்ளும்படி கூறிவிட்டு சென்றனர். அதன்பின் நதிஷா ரோஷினி, சுங்க வரியை கட்டுவதற்காக பணம் எடுத்துக் கொண்டு விமானநிலைய சுங்க இலாகா அலுவலகத்திற்கு சென்றாா். அப்போது அதிகாரிகள் நாங்கள் யாரும் அதுபோன்று உங்களிடம் இருந்து நகையை வாங்கவில்லை. உங்களை யாரோ ஏமாற்றி இருக்கின்றனர் என்று கூறினர். அதனை கேட்டு அதிர்ச்சியடைந்த நதிஷா ரோஷினி, யாரோ மர்மநபர்கள் சுங்க இலாகா அதிகாரிகள் போல் நடித்து தன்னிடம் நகையை பறித்து சென்றதை உணர்ந்தார்.

இது தொடர்பாக நதிஷா ரோஷினி விமான நிலைய போலீசில் புகார் செய்தார். அதன்படி மீனம்பாக்கம் போலீஸ் உதவி கமிஷனர் புகழ்வேந்தன், இன்ஸ்பெக்டர் பாண்டி போன்றோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப் படையினர் விமான நிலைய காா் பாா்க்கிங் பகுதியிலுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து போலி சுங்க இலாகா அதிகாரிகள் போல் நடித்த 2 பேரை மடக்கி பிடித்தனர். இந்நிலையில் கீழே விழுந்ததில் ஒருவருக்கு காலில் அடிபட்டது. இதனால் அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து நடத்திய விசாரணையில் அவர்கள் இலங்கையை சேர்ந்த செல்லையா அரவிந்தன் (40) மற்றும் முகமது நசீம் (31) என்பது  தெரியவந்தது. மேலும் இவர்கள்  கடந்த ஒரு மாதமாக சென்னை விமான நிலையத்தில் சுற்றிகொண்டு இலங்கையிலிருந்து வருபவர்களிடம் சுங்க இலாகா அதிகாரிகள் போல் நடித்து நகை, பணம் பறித்ததும் தெரிந்தது. அதன்பின் 2 பேரிடம் இருந்தும் 125 கிராம் தங்க நகைகளை பறிமுதல் செய்தனர். விமானங்களில் தனியாகவரும் இலங்கை பெண்களை குறிவைத்து இவர்கள் கைவரிசை காட்டி இருக்கின்றனர். இதனால் அவர்கள் 2 பேரையும் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Categories

Tech |