நாட்டில் உள்ள பல்வேறு நிதி நிறுவனங்கள் அல்லது வங்கிகள் கொடுத்த கடனை திருப்பி வசூலிப்பதற்காக தனியாக ஒரு ஏஜெண்டுகளை பயன்படுத்துகின்றனர். அவர்களின் வேலை என்னவென்றால் வங்கிகள் அல்லது நிறுவனங்கள் வழங்கிய கடனை வாங்கியவர்களிடமிருந்து திருப்பி வசூலித்துக் கொடுப்பது. இருந்தாலும் இந்த ஏஜெண்டுகள் கடன் வாங்கியவர்களை பெரும் இம்சை செய்வதாக தொடர்ந்து புகார்கள் எழுந்துள்ளன.
இவர்களின் தொந்தரவால் சில சமயங்களில் தற்கொலை செய்து கொள்ளுபவர்களும் உள்ளனர். இந்நிலையில் கடன் வசூலிக்கும் போது கடன் வாங்கியவர்களை எந்த விதத்திலும் தொல்லை செய்யக்கூடாது என்ற ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. அதாவது காலை 8 மணி முதல் இரவு 7 மணி வரை மட்டுமே கடன் வாங்கியவர்களை தொடர்பு கொள்ள வேண்டும். வங்கிகளும் நிதி நிறுவனங்களும் கடனை திருப்பி வசூலிப்பதற்காக ஏற்கனவே வழங்கப்பட்ட உத்தரவுகளை கடைப்பிடிப்பதில்லை.
ஏஜெண்டுகளின் செயல்களை கருத்தில் கொண்டு கடன் வாங்கியவர்களிடம் கடனை வசூலிக்கும் போது அவர்களை மிரட்டுவது, தொல்லை செய்வது, உடல் ரீதியாக அல்லது மன ரீதியாக தாக்குவது போன்ற செயல்களில் ஏஜெண்டுகள் ஈடுபடக் கூடாது. கடன் வாங்கியவரின் குடும்பத்தினர்,நண்பர்களை அவமதிப்பது மற்றும் சமூக வலைத்தளங்கள் மற்றும் மொபைல் வழியாக மிரட்டுவது, அடையாளம் தெரியாத எண்களில் இருந்து அழைப்பது, காலை 8 மணிக்கு முன்பு அல்லது இரவு 7 மணிக்கு பின்பு அழைப்பது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளது.