தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் கார் மீது செருப்பு வீசப்பட்ட சம்பவத்திற்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக திமுக தொண்டர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், தேசியக்கொடி பொருத்தப்பட்ட மாண்புமிகு அமைச்சரின் கார் மீது செருப்பு வீச்சு, விடுதலை நாளின் பவள விழா மகத்துவத்தையே மளிணப்படுத்தி இருக்கிறார்கள்.
தமிழ்நாட்டின் அமைதிக்கு சிறு குந்தகமும் ஏற்பட்டு விடக்கூடாது என்ற கவனத்துடன் திமுக செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் இது போன்ற செயல்களில் ஈடுபட்டால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும். இது தமிழ்நாடு… பாஜகவின் அரசியல் விளையாட்டு எடுபடாது என்று அவர் தெரிவித்துள்ளார்.