இளம் பெண் தற்கொலை செய்து கொண்டது குறித்து தூத்துக்குடி மாவட்ட உதவி கலெக்டர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
தூத்துக்குடி மாவட்டம் தெர்மல் நகரை சேர்ந்தவர் பால்சாமி இவரது மனைவி செல்லம்மாள் இவர்களுக்கு 2017 ஆம் ஆண்டு திருமணம் நடந்து தற்போது ஒரு பெண் குழந்தை உள்ளது. நேற்றைய முன் தினம் மகளுக்கு மொட்டை போடுவதன் காரணமாக கோவிலுக்கு செல்ல தீர்மானம் செய்யப்பட்டது ஆனால் குழந்தையின் தாய் செல்லம்மாள் கோவிலுக்கு தான் வரவில்லை என்று கூறியுள்ளார். எனவே பால்சாமி குழந்தை மற்றும் குடும்பத்தை சேர்ந்தவர்களுடன் கோவிலுக்கு சென்றுள்ளார். இந்நிலையில் விரக்தியில் இருந்த செல்லம்மாள் வீட்டில் யாரும் இல்லாமல் தனிமையில் இருந்த நேரத்தில் திடீரென தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்து தூக்குப் போட்டுக் கொண்டார்.
இச்சம்பவம் அறிந்து தெர்மல் நகர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து செல்லம்மாளின் உடலை பிரேத பரிசோதனை செய்ய அனுப்பி வைத்துள்ளனர். பின்னர் செல்லம்மாள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருமணம் முடிந்து மூன்று வருடங்களில் பெண் தற்கொலை செய்து கொண்டதால் இச்சம்பவம் குறித்து தூத்துக்குடி மாவட்ட துணை கலெக்டர் விசாரித்து வருகிறார்.