தமிழகத்தில் சென்ற வருடம் திமுக தலைமையிலான ஆட்சியமைந்தது. அதற்கு முன்பாக திமுக தேர்தல் வாக்குறுதியாக பலவற்றை கூறியது. அதேபோன்று ஆட்சிக்கு வந்ததும் தேர்தல் வாக்குறுதியில் அறிவித்த முக்கியமான திட்டங்களை செயல்படுத்த அரசு அதிரடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ள தொடங்கியது. அவற்றில் முக்கியமாக பள்ளிக் கல்வித்துறை ஒன்றாகும். பள்ளிக் கல்வித்துறையின் அமைச்சராக அன்பில் மகேஷ் பொய்யாமொழி பதவியேற்றார். அப்போது முதல் பள்ளிக்கல்வி மாணவர்களின் மற்றும் ஆசிரியர்களின் நலன் தொடர்பாக பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளது.
மாணவர்களின் கற்றல் இடைவெளியை பூர்த்தி செய்யும் விதமாக எண்ணும் எழுத்தும் திட்டம், இல்லம் தேடி கல்வி ஆகிய பல திட்டங்கள் நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது. இவையனைத்தும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதேபோன்று 1 -5 ஆம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டமும் விரைவில் அமலாக இருக்கிறது.
இந்த நிலையில் ஆசிரியர்களின் நலன் கருதி “ஆசிரியர்களின் மனசு” என்ற திட்டம் தொடங்கப்படுவது பற்றி புதுக்கோட்டையில் நடைபெற்ற “ஆசிரியர்களுடன் அன்பில் நம்மில் ஒருவர்” எனும் நிகழ்ச்சியில் அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார். அத்துடன் ஆசிரியர்கள் இத்திட்டத்தில் தங்களின் கோரிக்கைகளை தெரிவிக்கலாம். அவையனைத்தும் நிறைவேற்றப்படும். ஆகவே [email protected], [email protected] என்ற மெயில் ஐடியில் ஆசிரியர்கள் தங்களது கோரிக்கைகளை தெரிவிக்கலாம் என கூறியுள்ளார்.