நாடு முழுவதும் வருகின்ற ஆகஸ்ட் 15ஆம் தேதி 75வது சுதந்திர தின திருவிழா கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு பிரதமர் மோடி கேட்டுக் கொண்டதற்கு இணங்க பொதுமக்கள் தங்கள் வீடுகளில் தேசியக் கொடியை ஏற்றி வருகின்றனர். இது குறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள twitter பதிவில், “இல்லம் தோறும் மூவர்ணக் கொடி இயக்கத்திற்கு கிடைத்த அற்புதமான பதில் நான் மிகுந்த மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன்.
இந்த இயக்கத்தில் பல்வேறு தரப்பு மக்களின் சாதனை பங்கேற்பை பார்க்கிறோம். விடுதலை அமிர்த பெருவிழாவை குறிக்க இது ஒரு சிறந்த வழியாகும். மூவர்ண கொடியுடன் உங்கள் புகைப்படத்தை hargartirange.com என்ற இணையதளத்தில் பகிரவும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.