சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மின்சாரம் இல்லாம உலகத்துல ஏதாவது இயக்கம் இருக்கா ? அப்ப மின்சார உற்பத்தி யார்கிட்ட இருக்கணும், அரசு கிட்ட. ஏன் தனியார் முதலாளி கிட்ட போது ? இப்ப வர மின் மசோதா என்ன சொல்லுது ? தனியார் முதலாளி கிட்ட கொடுத்துடுவோம். உங்களுக்கு எந்த நிறுவனத்தில் வாங்க விருப்பம் இருக்கோ,
அந்த நிறுவனத்தில போய் மின்சாரம் வாங்கிக்கோங்க. நீங்க மாநிலத்துல மாநிலத்தில் மின்சாரத்தை தயாரிச்சிங்க அப்படின்னா. உங்ககிட்ட அனுமதி பெறாமலேயே அந்த மின்சாரத்த எடுத்து நாங்க வேற யார்கிட்டயாவது கொடுத்துடுவோமஅந்த அதிகாரம் எங்க கிட்ட தான் இருக்கு. என் மின்சாரத்தை என்கிட்ட கேட்காமலே, யாருக்கு வேணாலும் எடுத்து கொடுக்குற நீ, கர்நாடகாவுல கேட்காமலே தண்ணிய காவேரில எடுத்துக் கொடு. கேரளாவுல கேட்காமலே அந்த முல்லை பெரியாறு தண்ணிய எடுத்துக் கொடு. செய்வியா ? எப்படி இருக்கு பாருங்க…
அப்ப அந்த மின்சாரத்தை தயாரிக்கிற முதலாளி நிர்ணைகிறது தான் மின் கட்டணம். இன்னிக்கு 4 ரூபாயா இருக்கு அப்படின்னா,நாளைக்கு நாப்பது ரூபாயா ஆனாலும் நீங்க வாங்கி தான் ஆகணும். இது எவ்வளவு பெரிய ஆபத்தா இருக்கு? எவ்வளவு பெரிய ஆபத்த நோக்கி நாம நகர்ந்து கொண்டிருக்கிறோம் பாருங்க. திரைப்படத்தில் வந்து அரசியல் பேசக்கூடாது, பள்ளிக்கூடத்துக்கு போன அரசியல் பேசக்கூடாது, கல்லூரிக்கு போனா அரசியல் பேசக்கூடாது என விமர்சித்தார்.