தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வரும் வைகைப்புயல் வடிவேலுக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். இவர் இம்சை அரசன் 24 ஆம் புலிகேசி பட பிரச்சனையின் காரணமாக சில வருடங்கள் படங்களில் நடிக்காமல் இருந்தார். இந்தப் பிரச்சினை முடிவடைந்ததால் வடிவேலும் மீண்டும் படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார். இவர் நாய் சேகர் ரிட்டன்ஸ் மற்றும் சந்திரமுகி 2 ஆகிய படங்களில் தற்போது நடித்து வருகிறார். இந்நிலையில் வைகைப்புயல் வடிவேலுவின் ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதில் வைகை புயல் அவர்களே தற்போது நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்று கேட்கப்படுகிறது. அதில் நான் வைகைப்புயல் பேசுகிறேன். வைகை இவ்வளவு நாளாக வறண்டு போய் கிடந்தது. வைகை இப்போது திறந்து ஓடிக் கொண்டிருக்கிறது. இதனால் மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் அடைகிறார்கள் நன்றி என இருக்கிறது. இந்த வீடியோ இணையதளத்தில் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.