சுவிஸ் நகரம் ஒன்றில் தெருவோரமாக கிடந்த சூட்கேஸ் ஒன்றால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. Glarus மாகாணத்தின் தலைநகரான Glarus நகரில் பல மணி நேரமாக ஒரு சூட்கேஸ் அநாதரவாக கிடந்திருக்கின்றது. இது பற்றி போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டிருந்த நிலையில் போலீசார் அந்த பகுதியில் போக்குவரத்தை தடை செய்து அந்த சூட்கேஸில் என்ன இருக்கிறது என அறியும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
சுமார் 30 போலீசார், தீயணைப்பு துறையினர் மற்றும் மருத்துவ உதவி குழுவினர் சம்பவ இடத்திற்கு உடனடியாக வரவழைக்கப்பட்டுள்ளனர். அத்துடன் சூரிச்சிலிருந்து ரோபோ ஒன்று வரவழைக்கப்பட்டு அந்த சூட்கேஸ் வெகு பாதுகாப்பாக திறக்கப்பட்டது. ஆனால் அந்த சூட்கேஸிற்குள் எதுவும் இல்லை பெரும் பரபரப்பையும் பொதுமக்களுக்கு இடையூறையும் ஏற்படுத்தி அந்த சூட்கேஸின் உரிமையாளரை தேடும் முயற்சியில் தற்போது போலீசார் இறங்கி இருக்கின்றனர்.