லெபனான் நாட்டில் நிதி நெருக்கடியானது கடுமையாக நிலவிவருகிறது. அந்நாட்டின் பணம் 90 சதவீதத்துக்கும் அதிகமாக மதிப்பிழந்து இருக்கிறது. இதன் காரணமாக அந்நாட்டு மக்கள் வங்கிகளிலிருக்கும் தங்களின் வைப்பு தொகையிலிருந்து குறிப்பிட்ட தொகையை மட்டும் எடுக்கும் விதமாக அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்நிலையில் லெபனானின் தலைநகரான பெய்ரூட்டிலுள்ள ஒரு வங்கியில் 2 லட்சத்து 10 ஆயிரம் டாலர்களை வைப்புதொகையாக வைத்துள்ள இளைஞர் ஒருவர் மருத்துவ செலவுக்காக பணம் எடுக்க வங்கிக்கு சென்று இருக்கிறார்.
அப்போது அவர் அதிக தொகையை கேட்டதால் வங்கி ஊழியர்கள் பணம் வழங்க மறுத்து விட்டனர். இதனால் கோபமாக வங்கியை விட்டு சென்ற அந்த இளைஞர் கையில் துப்பாக்கியுடன் மீண்டும் அங்கு வந்தார். இதையடுத்து தான்கேட்ட தொகையை தரும்மாறு வங்கி ஊழியர்களை இளைஞர் துப்பாக்கி முனையில் சிறைப்பிடித்தார். இதன் காரணமாக அங்கு பெரும் பரப்பு ஏற்பட்டது. அதனை தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற காவல்துறையினர் வங்கி ஊழியர்களை சிறைப்பிடித்த இளைஞரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். நீண்ட பேச்சுவார்த்தைக்கு பின் இளைஞருக்கு 35,000 டாலர்களை வழங்க வங்கிஅதிகாரிகள் சம்மதம் தெரிவித்தனர். அதன்பின் சுமார் 6 மணிநேரமாக சிறைப்பிடித்து வைத்திருந்த ஊழியர்களை அவர் விடுவித்தார்.