Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

ஏரியில் மின்சாரம் பாய்ச்சி மீன்பிடிக்கும் நபர்களுக்கு…. வெளியான எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகில் பானையங்கால் கிராமத்திலிருந்து சித்தலூர் பெரியநாயகி அம்மன் கோயிலுக்கு போகும் வழியில் மணிமுக்தா ஏரி இருக்கிறது. இந்த ஏரியில் ஒரு கும்பல் கொக்கிபோட்டு மின்சாரத்தை பாய்ச்சி மீன் பிடித்து வந்தனர். இது தொடர்பாக அறிந்ததும் விழுப்புரம் மீன்வள மேற்பார்வையாளர் சுதாகர் நேற்று மணிமுக்தா ஏரியில் ஆய்வு மேற்கொண்டார்.

இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்களிடம் ஏரியில் மின்சாரம் பாய்ச்சி மீன்பிடித்தால் உயிர்சேதம் ஏற்படும். ஆகவே அவ்வாறு மீன்பிடிக்கக் கூடாது. அதையும் மீறி மின்சாரம் பாய்ச்சி மீன்பிடிக்கும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அத்துடன் மின்சாரத்துறைக்கு சொந்தமான மின் ஒயர்களில் திருட்டுத்தனமாக மின் இணைப்பு ஏற்படுத்தி மீன் பிடிக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

Categories

Tech |