Categories
அரசியல் மாநில செய்திகள்

ரஜினி தான் டார்கெட்…! சபதம் எடுத்த ஆர்.எஸ்.எஸ்… எரிச்சல் அடையும் பாஜக …!!

செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன்,  எல்லா மாநிலங்களிலும் இப்படி பிரபலமாக இருக்கிற ஆட்கள எ ல்லாம் கையகப்படுத்துகிறாங்க. அதாவது சினிமா மூலமாகவோ அல்லது இலக்கியத் துறையிலோ அல்லது விளையாட்டு துறையிலோ இந்த மாதிரியான மக்கள் மத்தியில செல்வாக்கு பெற்றவர்கள கையகப்படுத்தி, அவர்கள் மூலமாக மக்களை அணுகக்கூடிய ஒரு வேலையை அவர்கள் செய்து வருகிறார்கள்.

அந்த வகையிலே இங்க வந்து சினிமாக்காரர்களை பயன்படுத்துவதற்கான எல்லா வேலை திட்டத்தையும் தயாரித்து விட்டார்கள். அதிலே இப்போது ரஜினி ஒரு டார்கெட் என்று நாங்கள் கருதுகிறோம். பாஜகவுக்கு தேசபக்கத்தி இல்லம் இல்லை என்று உண்மையைச் சொன்னால் அவர்களுக்கு எரிச்சல் வருகிறது. ஆர்எஸ்எஸ் உடைய தலைமை அலுவலகத்தில் தேசிய கொடியை ஏற்றுவதில்லை என்று அவர்கள் ஏற்கனவே உறுதிமொழி எடுத்திருக்கிறார்கள்.

அதாவது அவர்கள் வெளிப்படையாக சபதம் எடுத்து வருகிறார்கள். ஏனா அவங்க வந்து காந்தியை வந்து தேசத்தந்தையா ஏற்றுக் கொண்டவர்கள் இல்லை. நாம் இப்போது ஏற்றுகிற தேசிய கொடியை ஏற்றுக் கொண்டவர்கள் இல்லை. நாம் இப்போது அழைக்கிற இந்தியா என்கிற பெயரை அவர்கள் மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டவர்கள் இல்லை. மதசார்பின்மை என்ற கருத்தை அவர்கள் ஏற்றுக் கொண்டவர்கள் இல்லை. அதனால் அரசியலமைப்புச் சட்டத்தையும் அவர்கள் முழுமையாக மதிக்கக் கூடியவர்கள் இல்லை என விமர்சித்தார்.

Categories

Tech |