பழமை வாய்ந்த கட்டிடங்களில் மின்விளக்கு அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் 75-வது சுதந்திர தின விழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. இந்த சுதந்திர தின விழாவை முன்னிட்டு பல்வேறு விதமான நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்னையில் உள்ள பல்வேறு பழமை வாய்ந்த கட்டிடங்கள் மின் விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி சென்னை தலைமைச் செயலகம் அமைந்துள்ள ஜார்ஜ் கோட்டை, எழும்பூர் ரயில் நிலையம், ரிப்பன் மாளிகை, பழமை வாய்ந்த கட்டிடங்கள், தனியார் ஹோட்டல்கள் மற்றும் கட்டிடங்கள் போன்றவைகள் மின் விளக்குகள் மற்றும் வண்ணப் பலூன்களால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து மெட்ரோ ரயில்வே நிலையங்களில் சுதந்திர போராட்டத்திற்காக பாடுபட்ட தியாகிகளின் புகைப்படங்கள் வைக்கப்பட்டுள்ளது. மேலும் ஐ லவ் யூ இந்தியா என்ற வாசகங்கள் அமைக்கப்பட்டு செல்ஃபி எடுத்துக் கொள்ளும் வகையிலும் அமைக்கப்பட்டுள்ளது. அந்த இடத்தில் பொதுமக்கள் மற்றும் சிறுவர்கள் ஆர்வமுடன் செல்பி எடுத்து செல்கின்றனர்.