இந்தியாவில் பெரும்பாலும் மக்கள் பாதுகாப்பாக மற்றும் வசதியான பயணத்தை மேற்கொள்ள ரயில் பயணத்தை தேர்வு செய்து வருகின்றனர். ஏனென்றால் அரசு பேருந்து கட்டணங்களை விட ரயில் கட்டணங்கள் குறைவாக இருக்கின்றது. ரயில் பயணம் கட்டணமும், நேர குறைவு என்பதால் ஏழை எளிய மக்கள் ரயில்களை நாடுகின்றனர். ரயிலில் நீண்ட தூரம் பயணம் செய்யும்போது சில நேரங்களில் பயணிகளுக்கு சலிப்பு தட்டு ஒன்றாக இருக்கும். இன்னும் சிலருக்கு ஒரு நிமித்தமாக உடனடியாக செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படலாம். அதே நேரத்தில் ரயிலில் பயணம் செய்யும்போது பசியை சமாளிக்க அடுத்த ஸ்டேஷன் வரை காத்திருக்க வேண்டியுள்ளது. அதிலும் அந்த ரயில் கிளம்புவதற்கு முன் உணவுகளை வாங்கி வருவது சில நேரங்களில் தவறான முடிவாக கூட இருக்கும்.
இந்நிலையில் உங்கள் உணவு உள்ளிட்ட அனைத்து வேலைகளையும் சுலபமாக விதத்தில் IRCTC ஆப்ஸ் மற்றும் இணையதளத்தில் இருந்து ஆன்லைனில் உங்கள் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வது போல, உங்கள் இருக்கைகளில் ரயில் பயணத்திற்கான உணவை ஆர்டர் செய்து எளிமையாகி உள்ளது. அதன்படி IRCTC தனது புதிய கேட்டரிங் செயலியை ரயில்களில் உணவு விநியோகத்திற்காக அறிமுகப்படுத்துகிறது. இது கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஸ்டோரில் கிடைக்கிறது இந்த ஆப் ஐ மொபைல் டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்து கொள்ள வேண்டும். அதனை தொடர்ந்து ரயிலில் இருக்கும் இடத்திலிருந்து ஆன்லைன் மூலம் உணவை ஆர்டர் செய்ய உதவு ஐந்து எளிய வழிமுறைகள் பின்வருமாறு
. முதலில் https://ecatering.irctc.co.in/ என்ற இணையதளத்திற்குள் செல்லவும்.
2. அடுத்து உங்கள் ரயிலின் பெயர் அல்லது ரயில் நிலைய எண்ணை டைப் செய்யவும்.
3. மேலும் உங்கள் PNR எண்ணை உள்ளிட்டு உங்கள் பயணத்திற்கான உணவகங்களை ஆராயுங்கள்.
4. பின் உங்களுக்குப் பிடித்தமான உணவை ஆர்டட் செய்து ஆன்லைனிலும் பணம் செலுத்தலாம் அல்லது உணவைப் பெறும்போதும் பணத்தைச் செலுத்தும் ஆஃப்சனை தேர்வு செய்யவும்.
5. இறுதியில் நீங்கள் குறித்த நேரத்தில் உங்கள் உணவானது உங்களிடம் டெலிவரி செய்யப்படும்.
இதனையடுத்து ரயிலில் உணவு பெட்டி டெலிவரி செய்யப்படும் சில முக்கிய ரயில் நிலையங்களாக மும்பை சென்ட்ரல், சத்ரபதி சிவாஜி டெர்மினல், புதுடெல்லி ரயில் நிலையம், பழைய டெல்லி ரயில் நிலையம், பெங்களூர் சிட்டி ஜங்ஷன் ஆகிய ரயில் நிலையங்களில் கிடைக்கும். மேலும் சென்னை சென்ட்ரல், கான்பூர், அலகாபாத் சந்திப்பு, வாரணாசி, லக்னோ, இடார்சி, போபால் சந்திப்பு, விஜயவாடா போன்ற இடங்களில் இதை விரிவுபடுத்த முனைப்பாக உள்ளது.