சென்னை சூளைமேடு நமசிவாயபுரம் பகுதியை சேர்ந்தவர் பழனி மற்றும் பாரதி தம்பதி. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். கார் ஓட்டுனராக வேலை பார்த்து வந்த பழனி கடந்த இரண்டு மாதங்களாக வேலைக்கு செல்லாமல் மனைவி பாரதி டீக்கடையில் கடந்த ஒரு மாதமாக பணியாற்றி வந்தார். அதனால் மனைவி பாரதி மீது சந்தேகம் அடைந்த பழனி வேலைக்கு செல்லக்கூடாது எனக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
நேற்று முன்தினம் மனைவி வேலை செய்யும் கடைக்கு சென்று தகராறு ஈடுபட்ட பழனி பாரதியின் தலையை சுவற்றில் இடித்து கீழே தள்ளினார்.அதன் பிறகு ரத்த வெள்ளத்தில் கிடந்த பாரதியை கட்டியணைத்து அருகில் படுத்துக்கொண்டார். அங்கிருந்த சில நபர்கள் பாரதியை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் நேற்று அதிகாலை அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மனைவி மீது சந்தேகம் கொண்ட கணவர் மனைவியை அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.