Categories
உலக செய்திகள்

படகு கிளப்பின் கரையில் கிடந்த உடல்… மக்களுக்கு காவல்துறையினர் எச்சரிக்கை…!!!

பிரிட்டன் நாட்டின் சர்ரேயில் இருக்கும் படகு கிளப்பில் நேற்று ஒரு நபரின் சடலம் கிடந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

பிரிட்டன் நாட்டின் டெஸ்பரோ செயிலிங் கிளப்பிற்கு அருகில் நீருக்கு அடியில் சென்ற ஒரு நபர் திரும்ப வரவில்லை என்று பொதுமக்கள் கூறியிருக்கிறார்கள். இந்நிலையில் நேற்று மாலை நேரத்தில் சர்ரேயின் ஒரு படகு கிளப்பின் அருகே இருக்கும் நீர்வழி பாதையில் ஒரு நபரின் உடல் கண்டெடுக்கப்பட்டது.

உடனடியாக அவசர உதவிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து நீரின் அடியில் மாயமான நபரை தேடும் பணி நடந்தது. அதில், தற்போது தேம்ஸ் நதியிலிருந்து ஒரு உடல் கண்டெடுக்கப்பட்டதாக காவல்துறையினர் கூறியிருக்கிறார்கள். நாட்டில் அதிக வெப்பநிலை இருப்பதால், மக்கள் திறந்தவெளி நீர்பகுதிகளுக்கு கவனமுடன் செல்ல வேண்டும் என்று காவல்துறையினர் கூறியிருக்கிறார்கள்.

Categories

Tech |