திருப்பூர் மாவட்டம் மூலனூரில் இருந்து மொடக்குறிச்சி வழியாக நேற்று காலை 9 மணியளவில் ஈரோடு நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. மொடக்குறிச்சி அருகே எழுமாத்தூர் மண் கரடு பகுதியில் வந்த போது எதிர்பாராத விதமாக முன்னாள் சென்று கொண்டிருந்த லாரியின் பின்பக்கம் அரசு பேருந்தில் மோதி உள்ளது. இந்த விபத்தில் பேருந்து கண்ணாடி நொறுங்கியது. உள்ளே இருந்த பயணிகள் ஐயோ அம்மா என்று அலறி துடித்தனர். ஆனால் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எதுவும் ஆகவில்லை. இந்த விபத்து காரணமாக அந்த பகுதியில் சுமார் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இது பற்றி தகவல் அறிந்ததும் மொடக்குறிச்சி போலீஸ் சம்பவ இடத்திற்கு சென்று போக்குவரத்தை சீர் செய்தார்கள் மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Categories
லாரி மீது அரசு பேருந்து மோதல்… ஐயோ அம்மா என அலறிய பயணிகள்… பெரும் பரபரப்பு…!!!!!
