நகர்புற வீட்டு வசதி திட்டத்திற்கான கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது.
இந்திய பிரதமர் மோடி தலைமையில் நேற்று கேபினட் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தின் போது பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ள நிலையில், மாநில அரசின் வேண்டுகோளுக்கு இணங்க பிரதமரின் வீட்டு வசதி திட்டத்திற்கான கால அவகாசமும் நீடிக்கப்பட்டுள்ளது. அதன்படி 2024-ம் ஆண்டு வரை வீட்டு வசதி திட்டத்திற்கான கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு 100 வீடுகள் கட்டி முடிப்பதற்கு திட்டமிடப்பட்டிருந்த நிலையில், திட்டமிடப்பட்டதை விட அதிக அளவில் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நடப்பாண்டில் மார்ச் மாதத்திற்குள் 122.69 லட்சம் வீடுகள் கட்டுவதற்கு திட்டமிடப்பட்டது. இந்த வீடுகளுக்கு நிதி உதவி வழங்கவும், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இதுவரை சுமார் 62 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ள நிலையில், 102 வீடுகளுக்கான கட்டுமான பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. மேலும் கூடுதலாக 40 லட்சம் வீடுகள் கட்ட வேண்டும் என்ற நிபந்தனை இருப்பதால், மத்திய அரசு வீட்டு வசதி திட்டத்திற்கான கால அவகாசத்தை நீட்டித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.