Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

திருமணம் முடிந்து 3 நாளில் பெண் தற்கொலை

திருமணமான மூன்றே நாளில் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தஞ்சாவூர் மாவட்டம் ஆற்காடு சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மகள் திவ்யா ஆற்காட்டில் இருக்கும் தனியார் கல்லூரியில் இறுதியாண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சென்னையைச் சேர்ந்த காவல் அதிகாரி ராகவேந்திரன் என்பவருக்கு கடந்த 7ஆம் தேதி திவ்யாவை திருமணம் செய்து வைத்துள்ளனர்.

இதனையடுத்து நேற்று கணவருடன் தாய் வீட்டிற்கு வந்த திவ்யா எல்லோரிடமும் ஆனந்தமாக பேசிவிட்டு ஓய்வு எடுக்கப் போவதாக கூறி அறைக்கு சென்ற திவ்யா நீண்ட நேரமாகியும் வெளியே வராததால் உறவினர்கள் கதவைத் தட்டி அழைத்து பார்த்துள்ளனர். பதில் எதுவும் இல்லாததால் சந்தேகம் கொண்ட உறவினர்கள் கதவை உடைத்து பார்த்தபோது அறையில் திவ்யா தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இதுகுறித்து ஆற்காடு காவல்துறையினர் வழக்குப்பதிந்து திவ்யாவின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். திருமணமான மூன்றே நாட்களில் திவ்யா தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |