Categories
தேசிய செய்திகள்

ரயில் பயணிகளுக்கு செம ஹேப்பி நியூஸ்…. இனி சாப்பாடு உங்களை தேடி வரும்…. இதை மட்டும் பண்ணுங்க போதும்….!!!!

இந்தியாவில் நீண்ட தூரம் பயணம் செய்பவர்கள் பலரும் ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றன. ரயிலில் பயணம் செய்யும்போது அடுத்த ஸ்டேஷன் வரும்வரை பயணிகள் காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளது. அல்லது அந்த ரயில் கிளம்புவதற்கு முன்பு உணவு வாங்கி வருவது சில நேரங்களில் தவறான முடிவாக கூட இருந்து விடும் . எனவே இதனை சுலபமாக்கும் விதமாக ஐ ஆர் சி டி சி செயலி மற்றும் இணையதளத்தில் இருந்து ஆன்லைனில் உங்கள் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வது போல உங்கள் பெர்த் அல்லது இருக்கையில் ரயில் பயணத்திற்கான உணவை ஆர்டர் செய்து எளிமையாக்கி கொள்ளலாம். அதற்கான eCatering செயடையை ஐ ஆர் சி டி சி அறிமுகம் செய்துள்ளது இது கூகுள் பிளே ஸ்டோர் அல்லது ஆப்பிள் ஸ்டோரில் கிடைக்கின்றது. முதலில் இந்த ஆப்பை டவுன்லோடு செய்ய வேண்டும்.

ரயிலில் இருக்கும் இடத்திலிருந்தே ஆன்லைன் மூலம் உணவை ஆர்டர் செய்ய  5 எளிய வழிமுறை:

1. முதலில் https://ecatering.irctc.co.in/ என்ற இணையதளத்திற்குள் செல்லவும்.

2.அதில்  உங்கள் ரயிலின் பெயர் அல்லது ரயில் நிலைய எண்ணை டைப் செய்யவும்.

3. மேலும் உங்கள் PNR எண்ணை உள்ளிட்டு உங்கள் பயணத்திற்கான உணவகங்களை தேர்வு செய்க.

4. அதன் பின்னர்  உங்களுக்குப் பிடித்தமான உணவை ஆர்டட் செய்து ஆன்லைனிலும் பணம் செலுத்தலாம் அல்லது உணவைப் பெறும்போதும் பணத்தைச் செலுத்தும் ஆஃப்சனை தேர்வு செய்யவும்.

5.இறுதியாக  நீங்கள் குறித்த நேரத்தில் உங்கள் உணவானது உங்களிடம் டெலிவரி செய்யப்படும்.

Categories

Tech |