Categories
மாநில செய்திகள்

கிண்டல் செய்தது போதும்….. முழுசா பிங்காக மாறிய அரசு பேருந்து…. வேற லெவல் ஐடியா….!!!!

தமிழகத்தில் அரசு நகர பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் பதவியேற்ற நாளிலிருந்து தொடங்கி வைத்தார். இந்த திட்டத்திற்கு தமிழ்நாடு மட்டுமில்லாமல் பிற மாநிலங்களில் இருந்தும் பாராட்டுகள் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து மாற்று திறனாளிகள், மூன்றாம் பாலினத்தவர்களுக்கு இந்த திட்டம் விரிவுபடுத்தப்பட்டது. அரசு பேருந்துகள் பெரும்பாலும் ஒரே வண்ணத்தில் இருப்பத்தால் இலவச பயணம் வசதி உள்ள பேருந்துகள் எது என்பதை கண்டறிய முடியாமல் பயணிகள் சிரம்மதிக்கு உள்ளாகின்றனர். இதற்கு ஒரு வசதி செய்து கொடுக்க வேண்டும் என்று போக்குவது துறை அதிகாரிகள் தொடர்ந்து ஆலோசனை மேற்கொண்டனர். அதன் பிறகு பெண்களுக்கு இலவச டிக்கெட் உள்ள பெண்களில் முன்புறம் பின்புறம் மட்டும் பிங்க் வண்ணம் பூசப்பட்டது. இதனால் தூரத்தில் தங்கள் பேருந்துக்களை அடையாளம் கண்டு கொள்ள முடியும் என்று கூறப்பட்டது.

இதனையடுத்து முன் பக்கம், பின் பக்கம் மட்டும் பிங் வண்ணம் பூசப்பட்ட பேருந்துகளில் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வெளியாகி கடும் விமர்சனங்களை சந்தித்து, மீம்ஸ் மற்றும் ட்ரோல் வீடியோக்கள் வெளியாகியது. ஆனால் அனைத்து பேருந்துகளும் வண்ணத்தை மாற்ற  அதிக செலவாக என்பதால் போக்குவரத்து துறை இந்த முடிவை எடுத்தது. தற்போது விமர்சனங்கள் அதிக அளவில் எழுந்துள்ளதால் முழு பேருந்துக்கும் பிங்க் வண்ணம் பூச முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதற்காக ஆகும் செலவை சரிகட்டும் விதமாக பேருந்தின் மற்ற பக்கங்களின் விளம்பர செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. விளம்பரமூலம் வருமானத்தையும் பெருக்கியது போல் இருக்கும், பயணிகளும் சிரமம் என்று பேருந்தே அடையாளம் காணலாம் என்று தற்போது முடிவெடுக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டுள்ளது. அதன் முதல் கட்டமாக 60 பேருந்துகள் முழுவதும் பிங்க நிறமாக மாற்றப்பட்டு பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

Categories

Tech |