இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வகையில் செப்டம்பர் 16-ம் தேதியன்று சௌரவ் கங்குலி தலைமையிலான அணி களமிறங்குகிறது.
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பழைய வீரர்களைக் கொண்டு லெஜெண்ட்ஸ் கிரிக்கெட் தொடர் நடக்கிறது.. இந்தலெஜன்ட்ஸ் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது சீசன் செப்., 17ஆம் தேதி தொடங்க இருக்கிறது. அதற்கு முன்னதாக செப்டம்பர் 16ஆம் தேதி ஒரு சிறப்பு ஆட்டம் நடைபெற இருக்கிறது.. இந்தியாவின் 75 வது சுதந்திர தின விழாவை கொண்டாடும் வகையில், செப்டம்பர் 16ஆம் தேதி அன்று சௌரவ் கங்குலி தலைமையிலான அணி பங்கேற்கும் சிறப்பு டி20 போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இதில் இந்திய மகாராஜாஸ் மற்றும் உலக ஜெயன்ட்ஸ் அணியும் மோதுகிறது.
இந்தப் போட்டிக்காக 90கால ரசிகர்கள் முதல் இந்த காலத்து ரசிகர்கள் வரை அனைவரும் எதிர்நோக்கி காத்துக் கொண்டு இருக்கின்றனர்.. ஏனென்றால் இந்த போட்டியில் தற்போதைய பிசிசிஐ தலைவரும், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனமான தாதா கங்குலி மீண்டும் மைதானத்திற்குள் கேப்டனாக செல்வதால் ரசிகர்கள் உச்சகட்ட மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.. அதேபோல இந்திய அணியின் அதிரடி தொடக்க ஆட்டக்காரரான வீரேந்திர சேவாக் ஆட போகிறார்.. பழைய அதிரடியை இந்த போட்டியில் சேவாக் தொடர்வாரா?.. இல்லை வயதாகி விட்டதால் சற்று பொறுமையாக ஆடுவாரா? என்னதான் சிங்கத்திற்கு வயதானாலும் அதன் ஆக்ரோஷம் குறையாது என்பது போல் இதிலும் சேவாக் முதல் பந்திலிருந்து பாய்வார் என்பதே அனைவரின் கருத்தாக இருக்கிறது..
மேலும் அதேபோல பல முன்னணி ஜாம்பவான்களும் இதில் இருக்கின்றனர்.. எனவே அவர்களும் பழைய ஆட்டத்தை நம் கண் முன்னே நிறுத்தப் போகிறார்கள்.. ஆக இந்த போட்டி ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.. சௌரவ் கங்குலி தலைமையிலான இந்திய மகாராஜாஸ் அணியில் வீரேந்திர சேவாக், ஹர்பஜன் சிங், யூசுப் பதான், இர்ஃபான் பதன், அஜய் ஜடேஜா உள்ளிட்ட வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்..
இந்திய மகாராஜாஸ் அணி :
சவுரவ் கங்குலி (கேப்டன்) வீரேந்தர் சேவாக், முகமது கைப், யூசுப் பதான், சுப்பிரமணியம் பத்ரிநாத், இர்பான் பதான், பார்த்தீவ் பட்டேல், ஸ்டுவர்ட் பின்னி, ஸ்ரீசாந்த், ஹர்பஜன் சிங், நமன் ஓஜா, அசோக் டிண்டா, பிரக்யான் ஓஜா, அஜய் ஜடேஜா, ஆர்.பி சிங் ஜோஹிந்தர் சர்மா, ரீதிந்தர் சிங் சோதி.
உலக ஜெயண்ட்ஸ் அணி :
ஈயோன் மோர்கன், ஹெர்ஷல் கிப்ஸ், ஜாக் காலிஸ், சனத் ஜெயசூர்யா, மாட் பிரியர், நாதன் மெக்கல்லம்,ஜாண்டி ரோட்ஸ், முரளிதரன், டேல் ஸ்டெய்ன், ஹாம்ல்டன் மசகட்சா, அஸ்கர் ஆப்கான், மிட்செல் ஜான்சன், பிரட் லீ, கெவின் டி பிரையன், தினேஷ் ராம்டின்.