தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவர் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தையை உருவாக்கி உள்ளார். தற்போது ரஜினிகாந்த் நடிக்கும் 169-வது படம் ஜெயிலர். இந்தப் படத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் ஐஸ்வர்யா ராய், பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணா ஆகியோர் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து சமீபத்தில் ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் 15ம் தேதி அல்லது 22 ஆம் தேதி தொடங்கப்படும் என்று ரஜினிகாந்த் அறிவித்தார். இந்நிலையில் இப்படத்தின் கதாநாயகி குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன் படி ஜெயிலர் படத்தின் ரஜினிக்கு ஜோடியாக தமன்னா நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.