ஜம்மு காஷ்மீரில் வீர மரணம் அடைந்த மதுரை புதுப்பட்டியை சேர்ந்த ராணுவ வீரர் லக்ஷ்மணன் உடல் நாளை சொந்த ஊர் கொண்டுவரப்படுகிறது.
ஜம்மு காஷ்மீரில் நேற்று பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலை படை தாக்குதலில் 4 இந்திய வீரர்கள் வீர மரணம் அடைந்தார்கள்.. அதில் தமிழகத்தை சேர்ந்த லட்சுமணன் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.. 24 வயதான ராணுவ லட்சுமணன் தமிழகத்தின் மதுரை மாவட்டம் டி.புதுப்பட்டியை சேர்ந்தவராவார்..
இந்நிலையில் இவரது உடல் நாளை சொந்த ஊருக்கு கொண்டுவரப்படுகிறது.. இவரது மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின், ஆளுநர் ரவி உள்ளிட்ட பலரும் தங்கள் இரங்கலை தெரிவித்து இருந்தனர். அது மட்டுமின்றி தமிழக அரசின் சார்பாக 20 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அவரது உடல் நாளை சொந்த ஊரான டி. புதுப்பட்டி கொண்டுவரப்படுகிறது.