Categories
தேசிய செய்திகள்

சுப்ரீம் கோர்ட்டில் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும்….. தலைமை நீதிபதி அதிரடி….!!!

இந்தியாவில் கொரோனா தொற்று குறைந்து வந்த நிலையில் மீண்டும் அதிகரித்து வருகிறது. இதனால் அனைத்து மாநிலங்களும் பாதுகாப்பு நடவடிக்கை பின்பற்றப்பட வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தி வருகிறது.

இந்நிலையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் கோர்ட் அறைக்குள் வக்கீல்கள் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி என்.வி.ரமணா அறிவுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியது, ஊழியர்களும், சக நீதிபதிகளும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே சுப்ரீம் கோர்ட்டில் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என்று அவர் அறிவுறுத்தியுள்ளார்.

Categories

Tech |