காஷ்மீரில் உள்ள புகழ்பெற்ற அமிர்தாத் குகை கோவில் பனிலிங்கத்தை தரிசிப்பதற்கான யாத்திரை கடந்த ஜூன் 30-ம் தேதி தொடங்கியுள்ளது. 43 நாட்கள் நடைபெற்ற இந்த யாத்திரை நேற்று அமைதியாக முடிந்தது. மேலும் யாத்திரை நிறைவை குறிக்கும் விதமாக வெள்ளி சூலம் இறுதி பூஜைக்காக குகை கோவிலுக்குள் வந்து சேர்ந்தது.
இந்த வருடம் 6 லட்சம் முதல் 8 லட்சம் பக்தர்கள் வரை வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டிருந்தது. ஆனால் வெறும் 3 லட்சத்து 352 பக்தர்கள் மட்டுமே வந்திருக்கின்றனர். காஷ்மீரில் சிறுபான்மையினரை குறி வைத்து பயங்கரவாதி தாக்குதல் நடத்தி வந்ததால் பலத்த பாதுகாப்புகளுக்கு இடையே இந்த யாத்திரை நடைபெற்றது. எந்தவித அசம்பாவிதமும் இல்லாமல் யாத்திரை முடிவு பெற்றதால் பாதுகாப்பு படையினர் நிம்மதி அடைந்திருக்கின்றனர். மேலும் கடந்த மாதம் மேகவெடிப்பால் ஏற்பட்ட கனமழையால் 15 பக்தர்கள் பலியான சோகமும் நிகழ்ந்தது.