செய்தியாளர்களிடம் பேசிய தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, எப்படி ஒரு வாரியத்தை செயல்படுத்த முடியும் ? உற்பத்தி எவ்வளவு வருகிறது ? ஒரு தொழிற்சாலை தொழில் நிறுவனம் வந்து உற்பத்தி செய்த விலையை விட…. குறைந்த விலைக்கு கொடுக்க முடியுமா ? ஒரு பொருளை… எவ்வளவு நாளைக்கு கொடுக்க முடியும் ? 9000 கோடி மானியம் கொடுத்த இடங்களில்… இன்றைக்கு 12,000 கோடி அரசு மானியம் கொடுக்கிறது…
3500 கோடி மின் கட்டண மாற்றங்களால் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அரசு மானியத்தை உயர்த்திக் கொடுக்கிறார்கள். ஓரளவுக்கு தான் அரசும் உதவி செய்ய முடியும்.. முழுவதும் அரசே உதவி செய்திட விட முடியாது, அதற்கு தொழில் நிறுவனங்களும், வணிக நிறுவனங்களும், பொதுமக்களும் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். பொதுமக்களுடைய போராட்டம் இதில் தேவை இல்லை, ஏனென்றால் சில இடங்களில் தவறாக சொல்ல வேண்டாம்…
சில இடங்களில் மாவட்ட ஆட்சியரிடமும், மாவட்ட நிர்வாகத்திடம் முறையிடாமல் அவர்களே தான் போராட்டம் நடத்தினால் தான், இதற்கு தீர்வு காண முடியும் என்பது ஒரு தவறான கருத்து அந்த இடத்தில் விதைக்கப்பட்டதன் மூலமாக போராட்டம் நடத்துகிறார்கள். மாவட்ட ஆட்சியரிடத்தில் ஒரு கோரிக்கையும் மனு கொடுத்தால் போதும்.. சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் சொன்னால் போதும்…
நிச்சயமாக அது போன்ற பணிகள் நடக்காது. நீங்கள் குறிப்பிட்டு சொன்னது ? என்னுடைய கவனத்திற்கு கொண்டு வந்துள்ளீர்கள்… நான் இன்றைக்கு ஆட்சியரிடம் பேசுகிறேன்.. இதுபோன்று இருக்கா ? என்று கேட்டுட்டு, மனு கொடுத்துள்ளார்களா என்று கேட்கிறேன். மனு கொடுக்க வில்லை என்றால் அந்த இடத்தில் பார்க்க சொல்ல சொல்கிறேன் என தெரிவித்தார்.