Categories
தேசிய செய்திகள்

பெரும் எதிர்பார்ப்பு….! அரசு ஊழியர்களுக்கு 8 வது சம்பள கமிஷன்….? விரைவில் அறிவிப்பு….!!!!

பணம் வீக்கம் அதிகரிப்பின் காரணமாக இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் அத்தியாவசிய பொருட்களின் நிலை வாசி உயர்ந்து கொண்டே இருக்கும். இதனை அரசு ஊழியர்கள் சமாளிப்பதற்காக வருடம் தோறும் இரண்டு முறை அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. இதனால் அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு ஏற்படுகிறது. இந்த சம்பள உயர்வு சம்பள கமிஷன் வழங்கும் பரிந்துரைகளின் படி வழங்கப்படும். ஆனால் இந்த பரிந்துரைகள் இரண்டு வருடங்களுக்குப் பிறகு அமல்படுத்தப்படும்.

கடைசியாக ஏழாவது சம்பள கமிஷன் கடந்த 2014ஆம் வருடம் அமைக்கப்பட்டது. அதன்படி 2016 ஆம் வருடம் முதல் ஏழாவது ஊதியக்குழு அளித்த பரிந்துரைப்படி அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படுகிறது. இதனையடுத்து கடந்த எட்டாம் தேதி அன்று நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்தொடரில் எட்டாவது சம்பள கமிஷன் நடைபெற்ற அமைப்பது தொடர்பாக அரசிடம் ஏதேனும் திட்டம் உள்ளதா? என்று கேள்வி எழுப்பப்பட்டதற்கு பதில் அளித்த மத்திய நிதிதுறை இணை அமைச்சர் இது தொடர்பாக எந்த ஒரு திட்டமும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

ஆனாலும் எட்டாவது ஊதியக்குழு அமைக்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளன. 2024-ஆம் வருடம் எட்டாவது ஊதியக்குழு அமைக்கப்படும் என்று மத்திய நிதி அமைச்சர்கள் அதிகாரியிடம் இருந்து தகவல்கள் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்றும் கூறப்படுகிறது.

Categories

Tech |