ஒரு பெண்மணி தான் நிதி நெருக்கடியால் படும் துயரங்கள் குறித்து ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.
பாகிஸ்தான் நாட்டில் பணவீக்கம் மற்றும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் அத்தியாவசிய பொருள்களின் விலை அதிகரித்து பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்நில்லையில் நிதி நெருக்கடியால் அவதிப்படும் ரபியா என்ற பெண்மணி ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். இவருக்கு 2 குழந்தைகள் இருக்கும் நிலையில் ஒரு குழந்தைக்கு கடந்த நான்கு மாதங்களாக உடல் நலம் சரியில்லாமல் போனதாகவும் அதற்கு மருந்து கூட வாங்க முடியாமல் தவிப்பதாகவும், கண்ணீர் மல்க வீடியோவில் கூறியுள்ளார்.
அதன் பிறகு நான் என்ன செய்ய வேண்டும்? எனக்கு வரும் வருமானத்தை வைத்து நான் வீட்டு வாடகை கட்டுவதா? மின்சாரம் கட்டணம் கட்டுவதா? என்னுடைய குழந்தைகளை பார்ப்பதா? இல்லையெனில் குழந்தைகளை கொன்று விடுவதா? என்று அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளார். இந்த வீடியோ தொடர்பான செய்தியை அந்நாட்டு பத்திரிகை நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ளது. இதற்கு அந்த நாட்டின் நிதி மந்திரி விளக்கம் கொடுத்துள்ளார். அதாவது கடந்த ஜூன் மாதத்தில் இருந்து மின்சார கட்டணம் அதிகரிக்கவில்லை என்றும், மருந்துகளுக்கு புதிய வரிகள் எதுவும் விதிக்கப்படவில்லை எனவும் கூறியுள்ளார்.