Categories
அரசியல்

நிதிஷ் குமார் எடுத்த முடிவு வரவேற்கத்தக்கது…. விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் பேச்சு….!!!!!!

பீகாரில் நிதிஷ் குமார் எடுத்திருக்கின்ற முடிவு வரவேற்கத்தக்கது என விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல் திருமாவளவன் பேசியுள்ளார். சென்னை மாலை முரசு அலுவலகத்தில் ராமச்சந்திர ஆதித்தனார் 88வது பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்ட திருமாவளவன் அஞ்சலி செலுத்திய பின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது சேது சமுத்திரம் கால்வாய்க்கு தமிழன் கால்வாய் என பெயர் சூட்டி  அதை வெற்றிகரமாக நிறைவேற்ற வேண்டும் என கூறியவர் சி.பா ஆதித்தனார். அவர் ஆற்றிய  தொண்டை அவரது வாரிசு ராமச்சந்திர ஆதித்தனரும் ஏற்று செயல்படுத்தி வந்துள்ளார்.

பீகாரில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றம் வரவேற்கத்தக்கது நிதிஷ்குமார் லாலு பிரசாந்த் யாதவ் அவர்களின் முடிவை விடுதலை சிறுத்தை கட்சி வரவேற்கின்றது. மேலும் சனாதன சக்திகளை முறியடிக்கும் ஒரு பெரிய முயற்சியை அனைத்து ஜனநாயக சக்திகளும் மேற்கொள்ள வேண்டும் என விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் கேட்டுக்கொள்கின்றோம். இந்தியாவில் உள்ள அனைத்து தரப்பு ஜனநாயக சக்திகளும் நிதிஷ்குமாரின் குரலை எதிரொலிக்கும் விதமாக செயல்பட வேண்டும் சனாதன சக்திகளை தனிமைப்படுத்துவோம் ஜனநாயக சக்திகளை அழிக்க படுத்தும் என்ற  நோக்கத்தில் செயலாற்ற வேண்டும். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஸ்ரீமதி விவகாரத்தில் ஏற்பட்ட வன்முறை அந்த வன்முறைக்கு தொடர்பில்லாத பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதை கண்டித்து ஆகஸ்ட் 13ஆம் தேதி விடுதலை சிறுத்தை கட்சிகள் சார்பில் கள்ளக்குறிச்சியில் போராட்டம் நடைபெற இருக்கின்றது. 2.8 லட்சம் கோடி இழப்பீடு ஏற்பட்டிருப்பதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்சி வருகின்றது. ஆனால் ஊடகங்கள் இதை பெரிய அளவில் கண்டு கொள்ளவில்லை என்பது ஏமாற்றம் அளிக்கிறது. காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்த காலத்தில் ஊழலை ஒழிப்போம் என கூறப்பட்ட ஜனநாயக சக்திகள் தற்போது வாய் மூடி மௌனியாக இருப்பது ஏன் என்று புரியவில்லை? என தெரிவித்துள்ளார். மேலும் கள்ளக்குறிச்சியில் பெண் ஊராட்சி மன்ற தலைவர் ஒருவர் தேசியகொடியை ஏற்றுவதற்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என கூறியுள்ளார் என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு இது பற்றி முதல் கவனத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும் அந்த பொண்ணுக்கு தகுந்த பாதுகாப்பை காவல்துறை அளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Categories

Tech |