Categories
தேசிய செய்திகள்

தொடரும் லெஸ்பியன் கலாச்சாரம்….. “கணவனை கைவிட்டு தோழியை மணந்த பெண்”….. பெரும் அதிர்ச்சி….!!!!

இந்தியாவில் லெஸ்பியன் கலாச்சாரம் தொடர்பான உறவுமுறை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. அதாவது ஒரு பெண் மற்றொரு பெண்ணை காதலிப்பது, ஒரு ஆண் மற்றொரு ஆண்ணை காதலிப்பது போன்ற பழக்கங்கள் அதிகரித்து வருகின்றது. இந்த லெஸ்பியன் கலாச்சாரத்திற்கு பல நாடுகளும் வரவேற்பு தருகின்றனர். அந்த வகையில் இந்தியாவிலும் இந்த கலாச்சாரம் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. ஆனால் இங்கு ஒரு திருமணமான பெண் தனது கணவரை விட்டுவிட்டு தனது பெண் தோழியை திருமணம் செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம், கடப்பா அருகே 25 வயது இளம் பெண் ஒருவர் தனது தோழியை திருமணம் செய்துள்ளார். கணவனைப் பிரிந்து தாய் வீட்டில் வசித்து வந்த அந்த பெண்ணுக்கு பக்கத்து வீட்டில் இருந்த 20 வயது இளம் பெண்ணுடன் நட்பு ஏற்பட்டுள்ளது. இது காலப்போக்கில் காதலாக மாறியுள்ளது. இதையடுத்து கடந்த 6-ம் தேதி யாருக்கும் தெரியாமல் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டு பாதுகாப்பு கேட்டு காவல் நிலையம் சென்றுள்ளனர். அங்கு காவலர்கள் அவர்கள் இருவருக்கும் அறிவுரை வழங்கி பெற்றோருடன் அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Categories

Tech |