Categories
உலக செய்திகள்

கடலில் கவிழ்ந்த புலம்பெயர்ந்தோர் படகு…. 50 நபர்கள் மாயமானதாக தகவல்…!!!

கிரீஸில் உள்ள ஏஜியன் கடலில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 50 நபர்கள் மாயமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

துருக்கி நாட்டின் அண்டலியாவிலிருந்து நேற்று முன்தினம் இத்தாலி நாட்டிற்கு புறப்பட்ட புலம்பெயர்ந்தோர் படகு கார்பதோஸ் மற்றும் ரோட்ஸ் தீவுப் பகுதிகளில் சென்றபோது திடீரென்று கடலில் கவிழ்ந்து. சுமார் 80 நபர்கள் அந்த படகில் இருந்திருக்கிறார்கள். இதில் 50 நபர்கள் மாயமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

29 நபர்கள் மீட்கப்பட்டிருக்கிறார்கள். இந்நிலையில், படகில் மூழ்கியவர்களை மீட்கும் பணி நடந்து கொண்டிருக்கிறது. பலத்த காற்று வீசுவதால், மீட்பு பணியில் சவால் ஏற்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. படகில் பயணித்த பலர் லைப் ஜாக்கெட்டுகளை அணியாமல் இருந்ததாக அதிகாரிகள் கூறியிருக்கிறார்கள்.

Categories

Tech |