Categories
உலக செய்திகள்

எரிவாயு நுகர்வை 15 % குறைக்க முடிவு?…. ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் வெளியிட்ட தகவல்…..!!!!

உக்ரைன் மீது ரஷ்யா சென்ற பிப்ரவரி 24ம் தேதி போர் தொடுத்தது. இப்போது வரை அங்கு போர் நடந்துவரும் சூழ்நிலையில், தாக்குதலை தொடங்கிய ரஷ்யாவின் மீது பல உலக நாடுகள் வரலாறு காணாத பொருளாதார தடைகளை விதித்துள்ளது. எனினும் ஐரோப்பிய நாடுகள் பெரும்பாலான எரிபொருளுக்கு ரஷ்யாவையே நம்பியிருக்க வேண்டியதாக இருக்கிறது. இப்போது ஐரோப்பியஒன்றியத்தின் 40% இயற்கை எரிவாயு, 30% எண்ணெய் மற்றும் சுமார் 20% நிலக்கரி ரஷ்யாவிலிருந்து கொண்டுவரப்படுகிறது.

இருப்பினும் இந்த வருடத்திற்குள் ரஷ்யாவிடம் இருந்து பெறப்படும் எரிபொருள் இறக்குமதி முற்றிலுமாக குறைக்கப்படும் என்று ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்தது. இந்நிலையில் ஐரோப்பிய ஒன்றிய கவுன்சிலானது வருகிற குளிர் காலத்தில் இயற்கை எரிவாயுநுகர்வை 15 % குறைக்கவும், ஐரோப்பியஒன்றியத்தின் உறுப்பு நாடுகளில் எரிசக்தி விநியோகத்தை உறுதிசெய்யவும் உடன்படிக்கை ஒன்றை அமல்படுத்தி இருக்கிறது.

இந்த உடன்படிக்கையின் அடிப்படையில் உறுப்புநாடுகள் எரிவாயு நுகர்வில் 15 சதவீதத்தை குறைக்க வேண்டும் எனவும் இதை இந்த ஆகஸ்ட் மாதம் முதல் 2023 மார்ச் காலக்கட்டத்திற்குள் நிறைவேற்ற வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. அதற்கு தேவையான நடவடிக்கைகளை அந்தந்த நாடுகளே தேர்வுசெய்து கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், ரஷ்யாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் எண்ணெய் மற்றும் எரிவாயுவை சார்ந்து இருப்பதை முடிவுக்கு கொண்டுவர இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு இருப்பதாக ஐரோப்பிய ஒன்றிய கவுன்சில் தெரிவித்துள்ளது.

Categories

Tech |