Categories
சினிமா தமிழ் சினிமா

“வெப் சீரிஸில் சுதந்திரமாக எல்லாவற்றையும் பண்ண முடிந்தது”…. பிரபல நடிகர் பேச்சு…!!!!!

இயக்குனர் ஹரி இயக்கத்தில் அண்மையில் வெளியான யானை படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அறிவழகன் இயக்கத்தில் அருண் விஜய் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் வெப் சீரிஸ்  தமிழ் ராக்கர்ஸ். இந்த தொடரில் வாணி போஜன், ஐஸ்வர்யா மேனன், அழகம்பெருமாள், வினோதினி, வைத்தியநாதன் மற்றும் எம்எஸ் பாஸ்கரன் போன்றோர்  முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த தொடரை மனோஜ்குமார் கலைவாணன் எழுத ஏவிஎம் புரொடக்சன் தயாரித்திருக்கின்றது. தமிழ் ராக்கர்ஸ் வெப் தொடரின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றுள்ளது.

இதில் நடிகர் அருண் விஜய் பேசிய போது என்னை எப்படி காட்டினால் சிறப்பாக இருக்கும் என்று இயக்குனருக்கு தெரியும் அதனால் அவர் இயக்குகிறார் என்றால் என்னை அப்படியே ஒப்படைத்து விடுவேன். இந்த கதையை 2 மணி நேரத்திற்குள் சொல்ல முடியாது. படத்தில் ஒரு நடிகராக எனக்கு சில கட்டுப்பாடுகள் இருக்கும் ஆனால் வெப் சீரிஸில் சுதந்திரமாக எல்லாவற்றையும் பண்ண முடிகின்றது. மேலும் இந்த வெப் சீரிசை பார்த்த பிறகு ஒரு படத்தை எடுப்பதற்கு பின்னால் எவ்வளவு வலி இருக்கிறது என்பதை அனைவரும் புரிந்து கொள்வார்கள் அந்த உணர்தலை இந்த சீரியஸ் நிச்சயம் ஏற்படுத்தும் என தெரிவித்துள்ளார்.

Categories

Tech |