தென்னிந்தியாவின் மிகப்பெரிய மண் அணணையாக பவானிசாகர் அணை அமைந்துள்ளது. இந்த அணையின் நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி இருக்கிறது. இங்கு பெய்த கனமழையின் காரணமாக பவானி சாகர் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இந்த நிலையில் கடந்த ஐந்தாம் தேதி காலை நிலவரப்படி 9 மணி நிலவரப்படி அணை நீர்மட்டம் 102 அடியை எட்டியுள்ளது. நேற்று முன்தினம் மாலை 5 மணி நிலவரப்படி பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 25 ஆயிரத்து 100 கன அடி தண்ணீர் வந்தது.
இதனால் அணையில் இருந்து பவானி ஆற்றின் மூலம் மேல் மதகு மற்றும் கீழ் மதகு வழியாக வினாடிக்கு 25 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் நேற்று முன்தினம் மதியம் நீலகிரி மலைப் பகுதியில் மழை பெய்வது குறைந்துள்ளது. இதனால் பவானிசாகர் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு குறைந்து இருக்கின்றது. நேற்று மாலை 4 மணி நிலவரப்படி வினாடிக்கு 15 ஆயிரத்து 300 கன அடி தண்ணீர் வந்தது. இதன் காரணமாக உபரிநீர் திறப்பும் குறைக்கப்பட்டுள்ளது. மேலும் பவானி ஆற்றில் கீழ் மற்றும் மேல் மதகு வழியாக வினாடிக்கு 15 ஆயிரம் கன அடி தண்ணீர் உபரிநீராக திறக்கப்பட்டுள்ளது. நீர்மட்டம் 2 அடியாகவே நீடித்து வருகின்றது.