Categories
தேசிய செய்திகள்

சுதந்திர தின விருந்து: இவர்களை அழைக்கணும்….. ஆளுநர் மாளிகைக்கு பறந்த உத்தரவு….!!!!

75 வது சுதந்திர தினத்தை ஒட்டி பொதுமக்கள் அனைவரும் வீடுகளில் தேசிய கொடி ஏற்ற வேண்டும் என்று மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. மேலும் பொது மக்களுக்கு தேசியக்கொடி சென்று சேரும் விதமாக பல்வேறு திட்டங்களையும் அரசு முன்னெடுத்து வருகிறது. இந்த நிலையில்   சுதந்திர தின விருந்துக்கு சமூக ஆர்வலர்களை அழைத்து கௌரவிக்க வேண்டும் என்று ஆளுநர் மாளிகைகளுக்கு மத்திய அரசு அறிவுரை வழங்கியுள்ளது.

சுதந்திர தினத்தன்று ஆளுநர் மாளிகையில் உயர்தர தேநீர் விருந்து நடைபெறும். இந்த நிகழ்ச்சிக்கு வழக்கமாக அழைக்கும் விருந்தினர்களை மட்டும் அழைக்காமல் உயிரிழந்த ராணுவ வீரர்களின் மனைவிகள், பதக்கம் வென்ற விளையாட்டு வீரர்கள், சமூக ஆர்வலர்கள் என 50 பேரை அழைக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |